காரைநகர் கடற்படை முகாமிற்கு அருகிலுள்ள கடலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

காரைநகர் கடற்படைமுகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில், கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று முற்பகல் 11 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு கரையொதுங்கிய சடலமானது 30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க ஆணுடையதெனவும் குறித்த நபர் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீட்கப்பட்டுள்ள சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.