மரணத்திலும் இணை பிரியாத தம்பதிகள்!!

குருணாகல் பன்னல பகுதியில் வான் வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

பன்னல நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வானின் சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ள நிலையில் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் மோதுண்ட தம்பதியினர் படுகாயமடைந்த நிலையில் தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் பங்கேற்று கிரியுல்லவிலிருந்து பன்னல நோக்கிப் பயணித்த வான் வண்டியே மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.