சொத்து குவிப்பு வழக்கு: பாகிஸ்தான் பிரதமரின் பதவியை பறித்தது உச்சநீதிமன்றம்

பனாமா ஊழல் வழக்கில் சொத்து குவித்தது நிரூபணமானதால் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன் பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர்.

இதில் தொடர்புடைய பிரமுகர்கள் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பெயரும் இருந்ததையடுத்து அவருக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வந்தது.

இதன் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், பனாமா கேட் ஊழல் வழக்கில் சொத்துக் குவித்தது நிரூபணமானதால் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் நீக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நவாஸ் ஷெரீப் மற்றும் அவர் குடும்பத்தார் மீது எழுந்த பனாமா கேட் ஊழல் வழக்கு குறித்த விசாரணையை பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.