மரத்தில் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்த கார்: ஒருவர் பலி

சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் கார் உள்ளே இருந்த ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் Brisbane நகரில் உள்ள Mango Hill பகுதியில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதையடுத்து கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர், இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தார்கள்.

இந்த விபத்தில் கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், காரில் மொத்தம் எத்தனை பேர் இருந்தார்கள் மற்றும் அவர்கள் காயம் அடைந்துள்ளார்களா என்ற விபரங்கள் தெரியவில்லை.

விபத்து நடந்த சாலையானது பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. அந்த வழியாக யாரும் செல்ல வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


No comments

Powered by Blogger.