இந்தியாவிடம் வீழ்ந்தது இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று தனது முதலாவது இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 600 ஓட்டங்களை பெற்றது.

இந் நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸ்க்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 291 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

309 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 240 ஓட்டங்களை பெற்ற வேளை தனது 2 ஆவது இன்னிங்ஸை இடை நிறுத்திக்கொண்டது.

இதையடுத்து 550 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

இன்றய 4ஆம் நாள் ஆட்டம் நிறைவடைவதற்கு முன்னர் அனைத்து விக்கெட்களையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்று இந்திய அணிக்கெதிரான 1வது டெஸ்ட் போட்டியில் 304 ஓட்டங்களால் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிக்கொண்டது.

இதையடுத்து இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.