பிரபல திரைப்பட நடிகர் மாரடைப்பால் மரணம்

பிரபல பாலிவுட் நடிகர் இந்தர் குமார் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சல்மான் கான் நடித்த வாண்டட் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகர் இந்தர் குமார் (45)

1990களில் புகழ்பெற்ற மொடலாக வலம் வந்த இவர் கில்லாடியான் கான் கில்லாடி, அக்னிபாத் போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தொலைகாட்சி தொடர்களில் நடித்து வரும் இந்தர் குமார் மும்பை நகரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் இந்தர் குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு இந்தர் குமாரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்கள்.

இந்தர் குமாரின் இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளது. அவரின் இறப்புக்கு திரையுலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.