நடிகர் ஜெய் நடிகை அஞ்சலி காதல் முறிந்தது!

எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் வெகு நாட்களாகவே ஓர் செய்தி உலவிக்கொண்டிருந்தது. அதனை ஜெய் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் மறுக்கவில்லை அதே சமயத்தில், ஜெய் ஒரு பேட்டியில் கூறும்போது, "நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. அதை எப்படி சொல்லவென்று தெரியவில்லை. எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்திருக்கிறது" என்று கூறியிருந்தார் இந்நிலையில், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டின் காரணமாக, அஞ்சலி அமெரிக்காவிற்கு சென்றுவிட்டதாகவும், தகவல்கள் கசிகின்றன.

No comments

Powered by Blogger.