கட்டார் விடயத்தில் அரபு நாடுகள் எடுத்துள்ள முக்கிய முடிவு

கட்டார் மீது மேற்கொண்டு புதிய தடைகளை விதிக்க போவது இல்லை என அரபு நாடுகளின் பிரதிநிதிகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கட்டார் தீவிரவாதத்துக்கு துணை போவதாக கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து, பஹ்ரன் ஆகியா நாடுகள் அந்த நாட்டுடனான தூதரக மற்றும் ராஜதந்திர உறவை துண்டித்து கொண்டன.

மீண்டும் உறவை புதுப்பிக்க அந்நாடுகள் சில நிபந்தனைகளை கட்டாருக்கு விதித்தது, ஆனால் அந்த நிபந்தனைகளை ஏற்க கட்டார் மறுத்து விட்டது.

இந்நிலையில் மேலும் சில தடைகளை கட்டார் மீது குறித்த அரபு நாடுகள் விதிக்கும் என கூறப்பட்டது.

இதையடுத்து நான்கு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூடி பேசினார்கள்.

இதில் கட்டார் மீதான தற்போதைய தடைகளே தொடரும் எனவும், புதிய தடைகள் எதுவும் மேற்கொள்ள போவதில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், கட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் அந்நாடு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் நான்கு நாடுகளின் அமைச்சர்கள் சேர்ந்து கூறியுள்ளார்கள்.

No comments

Powered by Blogger.