மட்டக்களப்பு எருவில் கிராமத்தைச்சேர்ந்த இளைஞர் கட்டாரில் மரணம்!!

(- செ.துஜியந்தன்-)
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட எருவில் கிராமத்தைச்சேர்ந்த கு.டேவிற் சுந்தர் (34வயது) என்பவரே கட்டாரில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி தனது பணிபுரியும் இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர்அங்கு உயிரிழந்துள்ளார். இவர் கம்பனி ஒன்றில் களஞ்சிய அறை காப்பாளராக கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது சகோதரர் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்திருந்தார். இந் நிலையில் 15 தினங்களின் பின்பு இவர் உயிரிழந்துள்ளமை அக் குடும்ப உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது. சடலம் இன்று30 ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.