சற்று முன்னர் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் அருகில் யாழ் நெடு வீதியில் விபத்து !!

இன்று திங்கள் கிழமை பிற்பகல்  04-00 மணியளவில் விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சியை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த பஜிரோ ரக வாகனமும் விபத்துக்குள்ளாகியது இதில் பயணம் செய்ய பயணிகள் உயிர்ச் சேதமின்றி தப்பினர் பஜிரோ ரக வாகனத்தின் சாரதி சிறு காயங்களோடு உயிர் தப்பினார்.

இந்த விபத்தானது சிறு பஜிரோ ரக வாகனத்தை ஓட்டிவந்த சாரதி தனது வேகக் கட்டுப்பாட்டினை இழந்ததன் காரணமாகவே சம்பவித்துள்ளதாகவும் இது சம்பந்தமாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் எமது யாழ் மாவட்ட செய்தியாளர் தெரிவித்தார்.


                                            (யாழ் கிளிநொச்சி மாவட்ட செய்தியாளர் ஜீ.மேக்சன்)
     

No comments

Powered by Blogger.