கூட்டத்தில் ஒருத்தன் திரைவிமர்சனம்

ஜோக்கர் என்ற தரமான படத்தை தைரியமாக தயாரித்தவர் S.R.பிரபு. இவரின் தயாரிப்பில் மீண்டும் ஒரு தரமான கதையை நம்பி இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ள படம் கூட்டத்தில் ஒருத்தன். அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் என பலர் நடிக்க, கூட்டத்தில் ஒருத்தனாக அசோக் செல்வன் ஜொலித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

எப்போதும் ஒரு கல்லூரியின் பர்ஸ்ட் பென்ச் ஸ்டூண்ட், லாஸ்ட் பென்ச் ஸ்டூண்ட் என்று இரண்டு வகை இருப்பார்கள். இவர்களை பற்றி தான் எப்போதும் படங்கள் பேசும், ஆனால், மிடில் பென்ச் என்பதை யாருமே இதுவரை பேசியது இல்லை.
அப்படி ஒரு மிடில் பென்ச் மாணவனின் கதை தான் இந்த கூட்டத்தில் ஒருத்தன், அசோக் செல்வன், எதிலும் நம்பர் 1-ஆக இருக்கும் ப்ரியா ஆனந்தின் மீது காதல் கொள்கின்றார்.
உன்னை நான் காதலிக்க வேண்டுமென்றால் நீ ஏதாவது பெரிய விஷயம் செய்யவேண்டும், என்னை போல் நம்பர் 1-ஆக இருக்கவேண்டும் என்று ப்ரியா ஆனந்த் கூறுகின்றார்.
ப்ரியா ஆனந்த் மனதில் இடம்பிடிக்க அசோக் செல்வன் செய்யும் வேலைகள், அதன் விளைவு, அதை தொடர்ந்து அவர் கூட்டத்தில் ஒருத்தனாக திகழ்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அசோக் செல்வனின் திரைப்படங்களிலேயே இது தான் பெஸ்ட் என்று கூறிவிடலாம், அத்தனை பொருத்தம் மிடில் பென்ச் மாணவனாக இவர் தோன்றும் போது, ப்ரியா ஆனந்தை இம்ப்ரஸ் செய்ய அவர் சமுத்திரக்கனியின் உதவியை நாட, அதை தொடர்ந்து அவருக்கே அது ஆபத்தாக, பின் இரண்டாம் பாதியில் மீதமாகும் உணவை வைத்து அவர் செய்யும் விஷயமெல்லாம் பலருக்கும் ஊக்கம் கொடுக்கும்.
இப்படி ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தயாரித்த பிரபு, இதை இயக்கிய ஞானவேல் இருவரையும் மனம் திறந்து பாராட்டலாம், ஏனெனில் 80% மாணவர்கள் இப்படத்தில் அசோக் செல்வனின் கதாபாத்திரத்தில் பொருந்துவார்கள்.
இரண்டாம் பாதியில் வரும் அந்த மீதமாகும் உணவை வைத்து செய்யும் விஷயங்கள், இதை நிஜ வாழ்க்கையிலேயே ஒருத்தர் செய்து வருகின்றார் என அவருக்கு கிரிடிட்ஸ் கொடுத்த விதம் சூப்பர்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் இனிமை, அதைவிட பின்னணியில் கலக்கியுள்ளார், வர்மாவின் ஒளிப்பதிவும் கவனம் ஈர்க்கின்றது.

கிளாப்ஸ்

அசோக் செல்வனின் நடிப்பு ரசிக்க வைக்கின்றது.
கதைக்களம், அதை திரைக்கதையாக எல்லோருக்கும் பிடிக்கும் படி கொண்டு சென்றவிதம்.
படத்தின் முதல் பாதியில் பாலசரவணின் காமெடி பல இடங்களில் சிரிக்க வைக்கின்றது.

பல்ப்ஸ்

சமுத்திரக்கனி என்ன தான் ரவுடியாக இருந்தாலும், அசோக் செல்வனுக்காக இவர் செய்யும் வேலைகள் கொஞ்சம் யதார்த்தம் விலகியுள்ளது.
மொத்தத்தில் இன்றைய இளைஞர்களுக்கு ஓர் ஊக்கம் தரும் படமாக இந்த கூட்டத்தில் ஒருத்தன் அமைந்துள்ளது.

No comments

Powered by Blogger.