கூகுள் அறிமுகம் செய்யும் SOS Alert பற்றி தெரியுமா?

மிகப் பிரம்மாண்டமான தேடுபொறி சேவையை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் வேறு பல பயன்மிக்க சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வருகின்றது.
இவற்றின் வரிசையில் SOS Alert எனும் மற்றுமொரு புதிய வசதியையும் அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் வசதியானது கூகுள் தேடல் மற்றும் கூகுள் மேப் போன்றவற்றில் இணைக்கப்படவுள்ளது.

இதன் ஊடாக நெருக்கடி நிலைகள் தோன்றும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக நெருங்கியவர்களை எச்சரிக்கை செய்ய உதவும்.

மேலும் இதன் ஊடாக நெருக்கடி நிலை தோன்றியுள்ள பகுதிகளின் நிலவரம் தொடர்பாகவும் மக்கள் உடனுக்கு உடன் அறிந்துகொள்ள முடியும்.

இவ் வசதி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை கூகுள் நிறுவனமே வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.