செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் பொலிதீன் உற்பத்தி வினியோகம் பாவனை அனைத்தும் தடை!!

எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் பொலிதீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை என்பன தடைசெய்யப்படவுள்ளது.

இதேவேளை இதற்கெதிராக கைது செய்யும் சட்டநடவடிக்கைகள் உடனடியாக இடம்பெறாது என்று இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இத்துறையை சார்ந்தவர்களின் நலன் கருதி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வற்காக உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2017.07.11ம் திகதி அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இதனை நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்துவதற்கும், அத்தடையினை செயற்படுத்துவதனால் பாதிப்படைகின்ற பொலிதீன் உற்பத்தி தொடர்பான அனைத்து தரப்பினரையும் முறையான முறையில் மாற்று முறையொன்றுக்கு உள்வாங்குவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை துணைப்பேச்சாளர்களான அமைச்சர்கள் டொக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.