ட்ரம்­புக்கு 10 வயது சிறுவன் அச்­சு­றுத்தல்.!

அமெ­ரிக்கப் படை­வீரர் ஒரு­வரின் 10 வயது மகன்  அந்­நாட்டு ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­பிற்கு அச்­சு­றுத்தல் விடுப்­பதை வெளிப்­ப­டுத்தும் புதிய காணொளிக் காட்­சி­யொன்று ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
ஈராக்கிய போரில் பங்­கேற்ற அமெ­ரிக்கப் படை­வீரர் ஒரு­வரின் மக­னான அந்த சிறுவன், ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக அமெ­ரிக்­காவால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள போர் இறு­தியில் அந்­நாட்­டையே சென்­ற­டை­ய­வுள்­ள­தாக  அந்தக் காணொளிக் காட்­சியில் அச்­சு­றுத்தல் விடுக்­கிறான்.
மேற்­படி காணொளிக் காட்சி சிரிய  ரக்கா நகரில் பட­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அந்தக் காணொளிக் காட்­சியில்  குறிப்­பிட்ட சிறுவன்  டொனால்ட் ட்ரம்ப் யூதர்­களின் கைப்பொம்­மை­யாக செயற்­ப­டு­வதாக குற்­றஞ்­சாட்­டு­கிறான். அந்த சிறுவன் இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது தாயாருடன் சிரிய ரக்கா நகரை சென்றடைந்ததாக சைட் புலனாய்வுக் குழு தெரிவிக்கிறது.

No comments

Powered by Blogger.