லிபியாவில் 11 பேர் தலைதுண்டித்துக் கொலை

லிபியாவில் 11 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டோரில் 9 இராணுவத்தினரும் 2 பொதுமக்களும் அடங்குவதாக அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

லிபியாவின் அல்-ஜுப்ரா பகுதியில் இராணுவ காவலரண் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்ட ஆயுததாரிகள், அதன் பின்னர் அங்கிருந்தோரின் தலைதுண்டித்துக் கொலை செய்துள்ளனர்.

இதேவேளை, தாங்கள் 21 பேரை கொலை செய்துள்ளதாக ஐ.எஸ்.ஐ.எஸ்.ஆயுததாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.