15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சீனா விஜயம்..?

15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று அடுத்தவாரம் சீனாவுக்கு செல்ல உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நேற்று சீனாவால் டிஜிட்டல் உபகரணங்கள் வழங்கப்பட்ட நிகழ்வின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக சின்சுவா ஊடகம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே அவர்கள் சீனா செல்கின்றனர்.

இந்த நிலையில், இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை சீனா வரவேற்பதாக இலங்கைக்கான சீனா தூதுவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.