18வது திருமண நாள்: விஜய்க்கு குவியும் வாழ்த்து

தளபதி விஜய் இன்று தனது 18வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

தளபதி விஜய் தனது ரசிகையான சங்கீதா சொர்ணலிங்கத்தை கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சஞ்சய், திவ்யா சாஷா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய்க்கு திருமணமாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று திருமண நாளை கொண்டாடும் விஜய், சங்கீதா தம்பதிக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜய் அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 20ம் தேதி மெர்சல் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசினார்கள். அரசியல் பேச்சை கேட்ட விஜய் வெட்கப்பட்டபடியே அமர்ந்திருந்தார்.

No comments

Powered by Blogger.