பெரியநீலாவணை பெரியதம்பிரான் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் -2017

                                                                                                                     ( - துறையூர் தாஸன் -)
பெரியநீலாவணை பெரியதம்பிரான் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா எதிர்வரும் புதன்கிழமை(09) மாலை திருக்கதவு திறந்தலுடன் ஆரம்பமாகி 15 ஆம் தேதி சமுத்திர நீராடலுடன் நிறைவுறவுள்ளது.

11 ஆம் திகதி முத்துச்சப்பற பவனியும் 12ஆம் தேதி வாழைக்காய் மடுவிலிடுதலும் 13 ஆம் தேதி கன்னிமார் பிடித்தலும் 14 தேதி மடையெடுப்பும் விநாயகப்பானை எழுந்தருள பண்ணுதலும் 15 ஆம் தேதி பலி கருங்கள்,பரிகலங்களுக்கு நோர்ப்பு எறிதல்,கும்பம் சொரிதல் மற்றும் சமுத்திர நீராடலுடன் கிரியா கால பூசைகள் அனைத்தும் நிறைவுபெறவுள்ளது.

சிவஸ்ரீ கோவிந்தன் சண்முகராஜ குருக்கள் பிரதம குருவாகவும் அ.சகாயநாதன்,கு.காருண்யன்,சி.கிருஷாந்தன்,த.சந்திரமோகன் ஆகியோர் உற்சவகால உதவி குருமார்களாக செயற்படவுள்ளனர்.
No comments

Powered by Blogger.