மதராசிப் பட்டினத்துக்கு (சென்னை) இன்று 378 ஆவது பிறந்த தினம்!

சென்னை நகருக்கு இன்று 378-வது பிறந்தநாள். சுமார் 10 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.

17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு,மாநிலத்தின் தலைநகரானது மதராஸ். நகரின் பெயரான மதராஸ், மெட்ராஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டுவந்தது. 1996-ம் ஆண்டு, சென்னை எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டது. சென்னை மாநிலம் 1969-ம் ஆண்டு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டது.

1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினர்.

அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கர்.அவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1639-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து சென்னை நகரம் உருவானது.

No comments

Powered by Blogger.