லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து : சீரியல் நடிகர்கள் இருவர் உட்பட 3 பேர் பரிதாப பலி..!


லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில் சீரியல் நடிகர்கள் இருவர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த ககன்தீப்(38), அர்ஜித்(30) ஆகியோர் இந்தி டிவி சீரியல் நடிகர்களில் நடித்து வருகின்றனர்.

அதில், ககன்தீப், ‘மகாகாளி-அந்த் ஹி ஆரம்ப் ஹாய்’ என்ற தொடரில் இந்திரனாகவும், அர்ஜித் நந்தியாகவும் நடித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் அகமதாபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு உதவியாளருடன் நேற்று மும்பை திரும்பி வந்துள்ளனர்.

நடிகர் ககன்தீப் காரை ஓட்டி வந்துள்ளார். மும்பை அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனால் தாறுமாறாக ஓடிய கார், கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்கானது.

இந்த விபத்தில் காரில் இருந்து மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

காரில், மதுபாட்டில்கள் இருந்ததால், அவர்கள் குடித்துவிட்டு காரை ஓட்டினாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.