’ஒரே மாதத்தில் 52 குழந்தைகள் உயிரிழப்பு!’

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜம்சேத்பூர் மகாத்மா காந்தி மெமோரியல் மெடிக்கல் காலேஜ் (எம்.ஜி.எம்.) மருத்துவமனையில் 52 குழந்தைகள் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 30 நாட்களில் 52 குழந்தைகள் இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனை கண்காணிப்பாளர் குழந்தைகள் இறந்ததற்கு ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

1961ம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது. இது 1979ம் ஆண்டில் பீகார் அரசால் மேற்கொள்ளப்பட்டது. 2010ம் ஆண்டிலிருந்து இந்த கல்லூரி சாய்பாசாவின் கோஹன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

இதே போன்று, கோரக்பூரில் கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் பாபா ராகவ் தாஸ் (BRD) மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் சுமார் 30 குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி இறந்து விட்டதாக முதலில் அறிவித்தனர். அதன் பின்னர் ஒரு வாரத்தில் 70க்கும் அதிகமான குழந்தைகள் இறந்துவிட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இரண்டு வாரத்தில் மீண்டும் பச்சிளங் குழந்தைகள் இறந்திருப்பது மக்களிடையேபெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.