இலங்கையில் இந்த ஆண்டில் இணையம் தொடர்புடைய குற்றச் செயல்கள் சம்பந்தமாக இத்தனை முறைப்பாடுகளா?!!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இணையத்துடன் தொடர்புடைய ஆயிரத்து 950 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைக் குழு தகவல் வெளியிட்டுள்ளது.

பதிவாகியுள்ள முறைப்பாடுகளில் அதிகமானவை முகப்புத்தகத்துடன் தொடர்புடையவை என்று, அதன் ஊடகப் பேச்சாளரான பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறியுள்ளார்.

போலி முகப்புத்தக கணக்குகளை உருவாக்குதல், அனுமதியின்றி வேறு முகப்புத்தக கணக்குகளுக்குள் நுழைதல், வேறு முகப்புத்தகங்களில் இருக்கின்ற புகைப்படங்களை வேறு கணக்குகளுக்கு பயன்படுத்துதல், போன்றன தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ரொஷான் சந்திரகுப்த மேலும் கூறியுள்ளார்.

முகநூல் குறித்த முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக இணையத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளுக்குள் அனுமதியின்றி உள்நுழைந்து மாற்றங்களை ஏற்படுத்துதல் தொடர்பாகவும் இந்த ஆண்டின் கடந்த 07 மாத காலத்திற்குள் இலங்கை கணினி அவசர நடவடிக்கைக் குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.