மட்டு ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் ஆவணி மாத பௌர்ணமி தின மகா யாகம்!

பகவான் முருகேசு சுவாமிகளின் சீடர் ஆன்மீக் குரு மகா யோகி எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள் பக்தர்களோடு அமர்ந்து காயத்திரி மந்திரம் பாராயணம் செய்கிறார்

"ஸ்ரீ பேரின்ப ஞான பீடம்" இந்த பீடமானது பஹவான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான மகா யோகி ஆன்மீகக் குரு எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் சுமார் பதின்மூன்றாண்டு காலமாக தன்னை அண்டிவந்த பக்தர்கள் குறை தீர்த்து அவர்கள் மூலம் அவர்களை காயத்திரி மந்திரம் ஜெபிக்கச் செய்து தியானத்தில் ஆழ்த்தி உலக வாழ் மக்கள் ஜீவராசிகள் அனைத்தும் நலமுற வாழ வழி காட்டி வருகிறார் கலியுகத்தில் லௌகீக வாழ்க்கை எவ்வளவு முக்கியமோ அந்த லௌகீக வாழ்வினை மகிழ்சியோடு வாழ்வதற்கு ஆன்மீகமும் அவசியம் என்பதனை ஆன்மீக அருளுபதேசங்களை அருளி நல் நெறி நின்று நோய் நொடியற்ற பேரின்ப வாழ்வினை அடைவதற்கான வழியினை சப்த ரிசிகளினதும் பதினெட்டு சித்தர்களினதும் மற்றும் பஹவான் காயத்திரி சித்தரின் நேரடிக் கண்காணிப்பிலும் தொடர்ந்தும் இடை விடாமல் இவ்வாறான வழிபாடுகளை செய்து வருகிறார்.
காயத்திரி மகா மந்திரம் மற்றும் குரு மந்திரங்கள்

இருந்தும் பஹவான் முருகேசு சுவாமிகள் அவரது காலத்தில் ஒவ்வொரு பௌர்ணமியிலும் இடை விடாது மகா யாகங்களை உலக சேமத்துக்காக நிகழ்த்தி வந்தார் சுவாமிகளின் சமாதியின் பின்னர் அவரால் நிகழ்த்தப் பட்ட யாகம் இதுவரை மட்டு நகரில் நிகழ்த்தப்படவில்லை சுவாமிகளின் அருட்திரு சீடரான எஸ். புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் இது வரை காலமும் முன்னர் மட்டு முதலியார் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் போதிய இட வசதியின்மையால் சுவாமிகளினால் ஸ்தாபிக்கப்பட்ட களுவாஞ்சிகுடி பழந்தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ யோக ஞான பீடம் மற்றும் மண்டூர் பாலமுனையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆத்மஞான பீடம் வம்மியடியூற்று கிளை, மற்றும் கல்முனைக் கிளை, கன்னன்குடா கிளை போன்ற பீடங்களில் இதுவரை காலங்களும் மகரிசிகளின் உத்தரவின் பேரில் பல மகா யாகங்களை உலக சேமத்துக்காக நிகழ்த்தினார்.

மண்டூர் பாலமுனை ஸ்ரீ ஆத்ம ஞான பீடம்

மட்டக்களப்பு முதலியார் தெருவில் அமைந்திருந்த 
ஸ்ரீ பேரின்ப ஞான பீடம்

Image117ஸ்ரீ யோக ஞான பீடம்
ஆனால் கடந்த மாதம் திடீரென தனது குருவினதும் மகரிசிகளினதும் மறைமுக ஆணையின் பெயரில்
இல. 07, பெரிய உப்போடை வீதி, பார் வீதி, மட்டக்களப்பு எனும் இடத்திற்கு இடம் மாற்றப் பட்டது ஸ்ரீ பேரின்ப ஞான பீடம்.


புதிதாக இடமாற்றம் பெற்றுள்ள ஸ்ரீ பேரின்ப ஞான பீடம்

தற்போது புதிதாக மாற்றம் பெற்றுள்ள ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் சுமார் பதின்மூன்று வருடங்களின் பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திங்கட்கிழமை அதாவது 07/08/2017 அன்று மட்டுமா நகரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி பதினெட்டு நிறை குடங்கள் வைத்து பதினெட்டு சித்தர்களையும் ஆவாகனம் செய்து பகவான் ஞான குரு ஞானத் தந்தை காயத்திரி சித்தர் ஆர்.கே. முருகேசு சுவாமிகளின் தெய்வீகத் திருப்பாதங்களுக்கு பால்,தேன்,இளநீர்,புஷ்பங்கள் சாத்தி அபிஷேகம் இடம்பெறும் அதனைத் தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட யாக சாலையில் இந்தியாவில் இருந்து மகரிசிகள் மூலம் தருவிக்கப்பட்ட 108 தெய்வீக உயிர் மூலிகைகள் மற்றும் உயிர் காக்கும் சஞ்ஜீவினி இதர சக்தி வாய்ந்த மூலிகைகள் இடப்பட்டு இலங்கை மற்றும் உலகவாழ் மக்கள் நோய் நொடியின்றியும் சாந்தி சமாதானத்துடனும் மிகவும் ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டி மகா சக்திவாய்ந்த மந்திரங்களுக்கெல்லாம் மூல மந்திரமான காயத்திரி மந்திரம் மற்றும் உயிர்காக்கும் மகா மிருத்தியுஞ்ஜெய மந்திரம் நோய்ப்பிணி தீர்க்கும் தன்வந்திரி மகா மந்திரம் ஏனைய மகா மந்திரங்கள் பக்தர்களினால் பக்திபூர்வமாக பாராயணம் செய்யப்பட்டு மகா சக்திவாய்ந்த மகா யாகம் நடைபெறும் அதனைத் தொடர்ந்து ஆன்மீகக்குரு எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் ஆன்மீக அருளுபதேசமும் அன்தானமும் வழங்கப்படும் எனவே இந்த உலக சேமத்துக்கான மகா யாகத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டால் உலகை ஆளும் மகரிசிகளினதும் இறைவனதும் தெய்வீக அருட் சக்தியினையும் ஆசீர்வாதத்தினையும் நேரடியாக அனுபவிக்கலாம்!.
தன்னை அண்டி வந்த பக்தர்களுக்கு ஆன்மீக அருளுபதேசம்
சற்குருநாதர் அருளுகிறார்
                                        
                                        பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கும் போது

                                       "நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்"-அ.குகாந்தன்

No comments

Powered by Blogger.