‘புலி’யைவிட மொக்கையா ‘விவேகம்?’ – பட ரேட்டிங்கால் ரசிகர்கள் அதிர்ச்சி

தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விவேகம்’ படத்திற்கு பிரபல சினிமா செய்தி நிறுவனம் கொடுத்துள்ள ரேட்டிங்கால், தளபதி நடித்த ‘புலி’ படத்தை விட மொக்கையா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அண்மை காலமாக சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், திரைத்துறைக்கு விளம்பரமும், விமர்சனமும் வெகு விரைவாக கிடைத்து வருகிறது.

ஒரு படம் வெளியாகி அப்படம் முடிந்து வெளிவரும் முன்னரே அப்படம் பற்றிய விமர்சனம் வெளிவந்து விடுகிறது. இது அப்படத்திற்கு விளம்பரமாகவோ அல்லது விமர்சனமாகவோ அமைந்துவிடுகிறது.

ஒரு படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றால், அடுத்த நிமிடமே அவரது ரசிகர்களே படம் சரியில்லை என சமூக வலைத்தளங்களில் கூறுவதால், அப்படம் மீதான எதிர்பார்ப்பு குறைந்து விடுகிறது.
இந்த வகையில் இணையதளமான ‘பிகைண்ட்வுட்ஸ்’ விவேகம் படத்திற்கு 2.25 ரேட்டிங் அளித்துள்ளது.
இது விஜய் நடிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான ‘புலி’ படத்துக்கு கொடுக்கப்பட்ட 2.75 ரேட்டிங்கை விட குறைவு.

இதனால் தல அஜித்தின் ‘விவேகம்’ படம், பல விமர்சனங்களை சந்தித்த ‘புலி’ படத்தை விட மொக்கையா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
No comments

Powered by Blogger.