கல்முனையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை

(செ.துஜியந்தன்) 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடமாடும் சேவைகள் பிரதேச மட்டத்தில் இடம் பெற்றுவருகின்றன. கடந்த ஐந்து தினங்களாக அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இவ் நடமாடும் சேவை நடைபெற்றுவருகின்றது. இச் சேவையின் இறுதி நடமாடும் சேவை கல்முனை தமிழ்; பிரிவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் க.லவநாதன் தலைமையில் நடைபெற்றது. 

இவ் நடமாடும் சேவைகளில் நேரடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடிவருகின்றார். அத்துடன் வெளிநாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ. அமீர் உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர். 
கல்முனை தமிழ் பிரிவில் நடைபெற்ற நடமாடும் சேவையில் வெளிநாடுகளில் பணிபுரிந்தபோது பாதிக்கப்பட்டவர்களும், அங்கு சென்று துன்பங்களை அனுபவிப்பவர்கள் தொடர்பிலும் அமைச்சரிடம் முறைப்பாடுகள் மக்களால் தெரிவிக்கப்பட்டது. 

வெளிநாட்டு அமைச்சின் மூலம் இடம் பெற்று வரும் இவ் நடமாடும் சேவையில் வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளம், விபத்து, கொடுமைகள் பற்றி கேட்டறியப்படுவதுடன் அதற்கான தீர்வுகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது அத்துடன் வெளிநாட்டில் பல வித துன்பங்களுக்கு முகம் கொடுத்தவர்கள் நஷ;டஈடு தொடர்பிலும் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். 
வெளிநாட்டு அமைச்சின் மூலம் இதுவரை திருகோணமலை, அனுராதபுரம், பொலநறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இவ் நடமாடும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.