ஐசிசி தரவரிசை வெளியீடு: இலங்கையை சுருட்டிய இந்திய நட்சத்திரம் தொடர்ந்து முதலிடம்

சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜா 897 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வின் இரண்டாமிடம் பிடித்துள்ளார், ஏற்கனவே இரண்டாமிடத்தில் இருந்த இலங்கை வீரர் ரங்கன ஹேரத் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

டெஸ்ட் துடுப்பாட்டகாரர்களுக்கான தரவரிசை பட்டியலில், இலங்கைக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் 190 ஓட்டங்கள் விளாசிய இந்திய வீரர் ஷிகர் தவான் 21 இடங்கள் முன்னேறி 39வது இடம் பிடித்துள்ளார்.

இந்திய வீரர் புஜாரா நான்காம் இடத்திலும், அணித்தலைவர் விராட் கோஹ்லி முறையே ஐந்தாம் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளனர், இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

No comments

Powered by Blogger.