எரிபொருள் நிலையத்தில் தீ

கலகெட்டியான பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீபரவல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, கண்டி - கொழும்பு வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த எரிபொருள் நிலையத்துக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் பௌசர் ஒன்றும் தீப்பற்றி எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

தீயணைப்பு படையினர் விரைந்துள்ளதுடன் தீணை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.