கூகுள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு தெரியுமா?

தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் கூகுள் நிறுவனம் உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமான வளர்ந்திருக்கிறது.
கலிபோர்னியாவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த Larry Page மற்றும் Sergey Brin ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடங்கினார்கள்.

கூகுள் நிறுவனத்தின் தற்போதைய மொத்த மதிப்பு $101.8 Billion ஆகும்.
கூகுள் நிறுவனத்தில் மொத்தம் 61,814 பேர் பணியாற்றுகிறார்கள். இதன் தலைமை அலுவலகம் Mountain View, California- வில் அமைந்துள்ளது.

கூகுள் நிறுவனத்துக்கு 40 நாடுகளில் 70 கிளைகள் இருக்கின்றன.

இணையத்தில் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்த பல நிறுவனங்களான Youtube, Blogger ஆகியவற்றை விலைக்கு வாங்கி தனது தொழிலை இரட்டிப்பாக்கிகொண்டது.

ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமான கூகுள் வளர்ந்திருக்கிறது.
கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகருக்கு அருகேயுள்ள கூகுளின் தலைமை அலுவலகம் கூகுள்ப்ளக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

இதன் பரப்பு 20 லட்சம் சதுர அடிகள். நியூயோர்க்கில் உள்ள மற்றொரு அலுவலகம் இதைவிடவும் பெரியது. இவ்விரு அலுவலகங்களிலும் மிகவும் இயற்கையான பணிச் சூழல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இசை, விளையாட்டு, பொழுதுபோக்கு , நீச்சல் குளங்களும் விதவிதமான உணவகங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றின் காரணமாகவே உலகம் முழுவதும் உள்ள மென்பொறியாளர்கள் அதிகமாக விரும்பும் நிறுவனங்களுள் ஒன்றாக கூகுள் திகழ்கிறது.

2015-ஆம் ஆண்டில் Alphabet என்ற பெயரில் தாய் நிறுவனம் உருவாக்கப்பட்டு அதற்குக் கீழ் கூகுள் கொண்டு வரப்பட்டது.
No comments

Powered by Blogger.