பாண்டிருப்பு கடற்கரையில் சிரமதானம்

செ.துஜியந்தன்

அம்பாரை மாவட்ட சுவாட் அமைப்பினால் யு.என்.டி.பி இன் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழல் பாதுகாப்பு செயற்பாட்டு நடவடிக்கையின் கீழ் கடற்கரை சூழலை பாதுகாக்கும் நோக்கில் வியாழக்கிழமை பாண்டிருப்பு கடற்கரையில் விழிப்புணர்வு நடவடிக்கையும், குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. 

சுவாட் அமைப்பின் திட்ட உத்தியோகஸ்தர் யோ.சுகேந்திராஜ் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில் சமூர்த்தி வலய உதவி முகாமையாளர் வி.ராஜேஸ்வரன், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான திருமதி எம்.எழில் அரசி, திருமதி பி.சிவகுமாரி உட்பட சமூர்த்தி பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.