கராத்தே வீரர் சந்திரலிங்கம் தேசபந்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் !!

 - செ.துஜியந்தன் -
பிரபல யோகாசன விற்பனரும் கராத்தே போதனாசிரியரும் சமூக சேவையாளரும் ஓய்வு நிலை அதிபருமான கா.சந்திரலிங்கம் தேசபந்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 

பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் இவ் விருது வழங்கப்பட்டது.கல்முனை தமிழர் மகா சபை,கிராம அபிவிருத்தி சங்கம்,அம்பாரை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு அமைப்பு ஆகியவற்றின் தலைவரும் கல்முனை பிரதேச கலாசார அதிகார சபையின் செயலாளருமான இவருக்கு சமய ,கலை,சமூக சேவைக்காக இவ் விருது வழங்கப்பட்டது

கல்முனை  - சேனைக்குடியிருப்பு  கிராமத்தைச் சேர்ந்த   இவர் யாழ்பாண பல் கலைக் கழகப் பட்டதாரியும் பெங்களூர் விவேகானந்த கேந்திர யோக ஆராய்ச்சி நிலையத்தில் யோகப் பயிற்சி பெற்றவரும்  கல்முனை கார்மல் பற்றிமாக் கல்லூரியின் பழைய மாணவரும் கொழும்பு இந்திய கலாசார நிலையத்தின் முன்னாள் யோகா ஆசிரியருமாவார்.

No comments

Powered by Blogger.