நந்தவனத்தில் நல்லூரானுக்கு வள்ளி, தெய்வயானையுடன் திருக்கல்யாணம்!

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பூங்காவனத் திருவிழா இன்று கோலாகலமாக இடம்பெறுகின்றது.
இதன்போது ஆலய நந்தவனத்தில் திருக்கல்யாண வைபவம் இடம்பெற்று வள்ளி, தெய்வயானை சமேதராய் முருகப்பெருமான் காட்சி கொடுக்கின்றான்.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமாகியது.

இந்தத திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெற்று 24ஆம் நாள் தேர்த்திருவிழாவும், 25ஆம் நாளான நேற்று தீர்த்தோற்சவமும், கொடி இறக்கமும் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று பூங்காவனத் திருவிழாவும், திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகின்றது.

No comments

Powered by Blogger.