சமூக மட்ட அமைப்புகளை ஒன்றிணைத்தல் தொடர்பான கருத்தரங்கு

                                                                                                       - துறையூர் தாஸன் -
நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமூக மட்ட அமைப்புகளை ஒன்றிணைத்தல் தொடர்பான கருத்தரங்கு, நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் புதிய பிரதேச செயலக செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.


நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில், அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளை பிரதேச மட்ட ஒன்றியத்தின் ஊடாக உரிய திணைக்கள அலுவலர்களிடம் முன்வைப்பதும் அதற்குரிய நடைமுறை தீர்வுகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது,தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டது.நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.மோகனகுமார்,கணக்காளர் வை.ஹபிபுல்லாஜ்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜீ.ஜெயக்காந்,மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பி.ஜெனீற்றா ஆகியோர் வளவாளராக கலந்து கொண்டு சமூக மட்ட அமைப்புகளுக்கு போதியளவு விளக்கத்தினை அளித்திருந்தனர்.நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள்,சங்கங்களின் உறுப்பினர்கள்,மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர்,மகளிர் சங்க உறுப்பினர்,ஏனைய சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இதன் போது பங்குபற்றுனர்களாக கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.