பிறந்த சில நொடிகளிலேயே பிஞ்சு குழந்தை செய்த செயல்: வைரலாகும் வீடியோ

பிரேசில் நாட்டில் பிறந்த சில நொடிகளிலேயே தாயாரை கட்டியணைத்த பிஞ்சு குழந்தையின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
பிரேசிலில் உள்ள சாண்டா மோனிகா மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி குறித்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது.
சிசேரியன் முறைப்படி பிறந்த அந்த குழந்தையை மருத்துவர்கள் தாயிடம் முதன்முறையாக அளித்ததும், அந்த குழந்தை தாயாரின் முகத்தை தனது பிஞ்சு கரத்தால் அணைத்துள்ளது.
இந்த நிகழ்வானது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம் என குழந்தையின் தாயார் பிரெண்டா தெரிவித்துள்ளார்.
குழந்தை தாயாரை அணைக்கும் அந்த காட்சியை படம் எடுத்த மருத்துவ குழுவினர், இதுபோன்ற ஒரு பிணைப்பை இதுவரை தாங்கள் பார்த்ததில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.