'காகிதங்கள், அட்டைகள், கம்பிகள்' - இவற்றை கொண்டும் ஆடை அலங்காரம்!

மேற்கிந்தியத் தீவுகளின் ஆண்டிகுவாவில் செயிண்ட் ஜான்ஸ் நகரில் வண்ணமயமான கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு பழைய கடையில் கலைஞர்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.

கோந்து, கத்தரி, மெல்லிய துணிகள் போன்ற பல பொருட்களை வைத்திருக்கும் அவர்கள், பாரம்பரிய சோக்கா இசைக்கு ஏற்றவாறு நடனமாடி அலங்கார அணிவகுப்பில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இந்த திருவிழாவில் வண்ணமயமான ஆடைகள் அணிந்து அழகாக சிங்காரித்துக் கொண்டு, தலைநகர வீதிகளில் ஊர்வலமாக செல்வார்கள்.

ஆண்டுதோறும் நடைபெறும் கார்னிவல் ஊர்வலத்திற்கு முன்பே, கடைகளும், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு, ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் தையல் கலைஞர்களுக்காக திறந்துவிடப்படும்.
இந்த அலங்கார அணிவகுப்பில் மக்களின் கவனத்தை ஈர்க்க அனைவரும் பெரும் முயற்சியில் ஈடுபடுகின்றனர், கடுமையாக உழைக்கின்றனர்.

இது அறுபதாவது ஆண்டு அலங்கார அணிவகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
200 ஆண்டுகளுக்கு முன் விடுதலை பெற்ற ஆண்டிகுவா மக்கள் அதை கொண்டாடுவதற்காக வீதிகளில் இறங்கினார்கள்.

காலப்போக்கில் கொண்டாட்டத்தின் உத்வேகம் அதிகரித்து, திருவிழா மாபெரும் நிகழ்வாக மாறியது.
இந்த ஊர்வலமானது ஆடை அணிகலன்களின் ஈர்ப்பு மையமாகிவிட்டது. 1957-இல் முதன்முறையாக இந்தக் ஊர்வலம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் ஆடைகள் மிகவும் நீண்டதாகவும், எடை அதிகமானதாகவும் இருப்பதாக கூறும் ஆடை வடிவமைப்பாளர் கால்வின் சவுத்வெல், தற்போது அவை மெலிதாகவும், சாதாரணமாக அணியக்கூடியதாகவும் மாறிவிட்டதாக கூறுகிறார்.
ஆடை வடிவமைப்பாளர் கால்வின் சவுத்வெல்

ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் அலங்கார அணிவகுப்பின் தாக்கம் இங்கும் எதிரொலிக்கிறது. ஆடைகள் ரியோ டி ஜெனிரோவை மாதிரியாகக்கொண்டே இங்கு ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன.

ஆனால் ஆண்டிகுவாவில் பராம்பரிய ஆடைகளுக்கென்று பிரத்யேக இடம் உள்ளது. ஒரு ஆடையை தயார் செய்ய பல தினங்களாகும்.
ஆடைகளை தயாரிப்பதற்கு வண்ணமயமான மின்னும் காகிதங்கள், அட்டைகள், கம்பிகள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது மென்பட்டு, சரிகை, வண்ணமயமான சிறகுகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

"ஆடை வடிவமைப்புக்கு சுமார் ஆறு மாதங்கள் பிடிக்கின்றன" என்கிறார் சவுத்வெல்.
சவுத்வெல் சொல்கிறார், "உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் இந்த ஆடைகளுக்கு தேவையான சிறகுகள் அமெரிக்கா, சீனா, டிரினிடாட் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மீதமுள்ள அனைத்துப் பொருட்களும் உள்நாட்டை சேர்ந்தவை".

"இந்த ஆடைகள் எங்கள் தனித்தன்மையை பிரதிபலிக்கிறது. ஆண்டிகுவாவின் புகழ்பெற்ற மெல்லிய பருத்தி பயன்படுத்தப்படுகிறது. எங்கள் கலையும், பாரம்பரியமும் நீடித்து நிலைக்கவேண்டும் என்று முயற்சிக்கிறோம்" என்கிறார் சவுத்வெல்.

சவுத்வெல் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்த அலங்கார அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
மற்றொரு ஆடை வடிவமைப்பாளர் ஹென்றி சொல்கிறார், ஆடைகள் உருவாக்குவதில் 80 சதவிகிதம் கைவேலைப்பாடுகள். அதிலும் ஆடைகளில் சிறகுகள் தைப்பது ஒரு தனிப்பட்ட கலை.

ஆடைகளுக்கு மெருகேற்றுவதற்காக, அணிகலன்களும் அவற்றில் சேர்த்து தைக்கப்படுவதாக ஹென்றி சொல்கிறார்.
வண்ணங்களின் அழகான இந்த அலங்கார அணிவகுப்பு வண்ணமயமாக இருக்கும் என்று ஏற்பாட்டாளர் ரோஜர் பெரி சொல்கிறார். ஆவலைத் தூண்டும் அலங்கார அணிவகுப்பை பார்க்க அனைவரும் தயாராகவே இருக்கின்றனர்.

No comments

Powered by Blogger.