கிளிநொச்சியில் கோர விபத்து !!(படங்கள் இணைப்பு)

இன்று அதிகாலை 03:00 வெள்ளிக்கிழமை (04/08/2017) அன்று கொழும்பில் இருந்தது வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் அதிகாலை மூன்று மணியளவில் சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து கிளிநொச்சி வைத்தியசாலை அருகிலுள்ள சிங்களப் பாடசாலை வளாகத்தினுள் புகுந்து கட்டடங்களில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில் சாரதியும் மற்றும் பயணிகள் ஆறு போர் படுகாயம் அடைந்தனர் படுகாயமடைந்தவர்கள் தற்போது கிளி நொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர் இவ் விபத்தில் மின்சார கம்பங்கள் அரச உடமைகள் பல சேதமடைந்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
                                                                                         - யாழ் நிருபர்  ஜீ.மேக்சன் -


No comments

Powered by Blogger.