ரங்கன ஹேரத் விளையாட மாட்டார்

இந்திய அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்துக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நுவன் பிரதீப் உபாதை காரணமாக போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் மேலும் இரு வீரர்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

ரங்கன ஹேரத்துக்கு உபாதைகள் எதுவும் இல்லை எனவும் சிம்பாப்வே, இந்திய அணிகளுடனான போட்டிகளின் போது தொடர்ச்சியாக பந்து வீசியமையால் ஓய்வு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி, பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடவுள்ளதால், ரங்கன ஹேரத்தின் வயதையும் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

“வீரர்களை சரியாக முகாமைத்துவப்படுத்த வேண்டியுள்ளது. நாம் எந்தவொரு வீரரையும் இழக்க விரும்பவில்லை” என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமையார் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.