கொரிய மொழி அறிவுப் பரீட்சைக்கு தோற்றாமல் போன பரீட்சாத்திகளுக்கு மற்றுமொரு வாய்ப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கொரிய மொழி அறிவுப் பரீட்சைக்கு தோற்றாமல் போன பரீட்சாத்திகளுக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்படி, அவர்களுக்கு வேறொரு தினத்தை வழங்க கொரிய மனித வள பிரிவு தீர்மானித்துள்ளது

அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்  www.slbfe.lk  என்ற இணைத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பதாரிகள் தமக்கான திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள முடியும்.

கடந்ம 27ஆம் திகதி கொரிய மொழி அறிவு பரீட்சை இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதற்கு 22 ஆயிரத்து 882 பேர் தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.