ஆன்மீக பொது அறிவுப் போட்டி

[செ.துஜியந்தன்]

கொழும்பு அன்னை அபிராமி அறநெறிச் சங்கம் இந்து மதத்தின் சிறப்புக்களை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கிலும், அனைவரின் அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கிலும் ஆன்மீக பொது அறிவுப் போட்டி ஒன்றினை நடத்தவுள்ளது.

ஏனைய பரீட்சைகள், போட்டிகள் போன்று இல்லாமல் சற்று வித்தியாசமான முறையில் இந்த போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளது. அனைத்து அறநெறிப்பாடசாலைகளும் இப்போட்டியில் பங்கெடுத்து அறநெறி மாணவர்களை ஊக்கப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர். 

இவ் போட்டி பரீட்சையில் வழங்கப்படும் வினாக்கள் அனைவரதும் சமய அறிவுத்திறன், ஆராயும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் எமது சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் பல விசியங்களின் உண்மை தத்துவத்தினையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
போட்டி பரீட்சை விதி முறைகள் 
1.ஆறாம் தரத்திற்கு மேல் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இதில் பங்கு பற்றலாம்.
2.வினாத்தாளுக்குரிய விடையை எழுதுவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் (வினாத்தாள் வழங்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு மாத காலம்)
3.இப் பரீட்சையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபற்ற விருப்பம் இருப்பின் அறநெறிப்பாடசாலைகளுடாக விண்ணப்பிக்க முடியும்.
4.80 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
5. சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தும் அறநெறிப்பாடசாலைகளுக்கு சான்றிதழும், நினைவுச் சின்னமும் வழங்கப்படும் 
மேலதிக தொடர்புகளுக்கு 0115633502, 0778304302, 0112522358 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.