ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் மூவர் கைது!!

ஆவா குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை சுன்னாகம் பொலிஸார் நேற்று (09) இரவு 7.35 மணியளவில் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மானிப்பாயைச் சேர்ந்த அஜித் குமார் என்று அழைக்கப்படும் துரைசிங்கம் ராஜ்குமார் மற்றும் எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ரவீந்திரன் ஆகிய இருவருடன் சுன்னாகத்தைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபரான ஸ்டாலிங்டன் என்ற கிருஷ்ணபிள்ளை கிருபாகரன் என்பவரையும் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இன்று (10) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.