விவேகம் பார்க்க சென்ற ரசிகர்கள் ஏமாற்றம்

`விவேகம்' படத்தின் சிறப்பு காட்சிகள் ஒருசில திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் `விவேகம்' படம் உலகமெங்கம் இன்று வெளியாகியிருக்கிறது.

சிறப்பு காட்சிகளை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் நல்ல விமர்சனங்களையே பதிவு செய்து வருகின்றனர். 

அஜித் ரசிகர்களும் படத்தை முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்று இரவு முதலே திரையரங்குகளில் காத்திருந்து படத்தை பார்த்து வருகின்றனர்.

இதில் சென்னையில் காசி திரையரங்கில் `விவேகம்' படத்திற்கான அதிகாலை சிறப்பு காட்சிக்கு காவல் துறை அனுமதி அளிக்காததால் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அஜித் ரசிகர் ஏமாற்றத்துடன் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

காசி திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டுள்ள நடிகர் அஜித்தின் பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் `விவேகம்' படத்தில் அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். 

விவேக் ஓபராய், கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

No comments

Powered by Blogger.