இன்று விநாயகர் சதுர்த்தி விரதம்!

விக்கினங்களை வேரறுக்கும் விநாயகப் பெருமான் அவதரித்த நாளாக போற்றப்படும் விநாயகர் சதுர்த்தி இன்றாகும்.

இந்துக்களின் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத்தை, உலக வாழ் இந்துக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

பிள்ளையார் ஆவணி சதுர்த்தியில் அவதரித்தாக புராணங்கள் கூறுகின்றன. காணபத்திய வழிபாட்டில் மாதாந்தம் வருகின்ற சதுர்த்தியினை விட, ஆவணி மாத சதுர்த்தி சிறப்பிடம் பெறுகின்றது.

கணங்களின் அதிபதியாகவும் விக்கினங்களை தீர்ப்பவராகவும் முதல் கடவுளாகவும் விளங்கும் விநாயகரின் முதன்மை விரதமாக ஆவணி சதுர்த்தி விளங்குகின்றது.

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகின்ற விநாயகர் சதுர்த்தியானது, தனிச்சிறப்பு வாய்ந்தது என இந்துக்கள் நம்புகின்றனர்.

விநாயக சதூர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் இன்று சிறப்பு பூஜை, வழிபாடுகளிலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் மலையகத்திலும் பல ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய விநாயகர் ஆலயங்களில் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சில ஆலயங்களில் மஞ்சளால் செய்த விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரம்மஸ்ரீ. இ.பூர்ணசந்திரானந்த குருக்கள் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பெருந்திரளான பொது மக்களும் பக்திபூர்வமாக பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.