மட்டு-ஆரையம்பதி வைத்தியசாலையின் இன்றைய அவல நிலை!

(மட்டுநகர் கமல்தாஸ்)
தேன் நகரம் எங்கள் தேசம். தேன் கலந்த தமிழோடும் அங்கு மீன்பாடும், ஆறு பாய்ந்தோடும் எங்கள் மட்டுமா நகரம். அங்கே ஆரம்பமாய் அமைந்த வைத்தியசாலை அது எங்கள் ஆரயம்பதி வைத்தியசாலை. 

நகரத்திலோ கிராமத்திலோ வாழ்கின்ற மக்களுக்கு இலகுவான முறையில் சென்றடையக்கூடிய வகையில் அமைந்துள்ளது ஆரயம்பதி வைத்திய சாலை.
90 வயதைத்தாண்டிய முதியவர் கூட இந்த வைத்திய சாலையில் தான் பிறந்தேன் என்று பெருமையுடன் கூறுகின்றார். 

அப்போது இந்த வைத்தியசாலை எவ்வளவு பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகின்றது. 
மாவட்ட வைத்தியாசாலையாக மாவட்டத்தின் பிரதான வீதியில் அமைவிடமாகக் கொண்டு மக்களுக்கு நற்பணி செய்து வருகின்ற வேளையில்,இந்த வைத்தியசாலையின் நற்பெயரை வைத்து சில அரசியல் வாதிகளினால் திட்டமிட்டுத் தமிழர்கள் வாழும் இடத்தில் உள்ள, இந்த ஆரையம்பதி வைத்திய சாலை புறக்கணிக்கப்படுகின்றது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பல நாடுகளுக்குச்சென்று முஸ்லிம் அரசியல் வாதி ஒருவரால் காத்தான்குடி வைத்தியசாலை நிர்ணயிக்கப்பட்டது. அவ் வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு முஸ்லிம் அரசில்வாதிகளால் நாடகங்கள் அரேங்கேறிக்கொண்டிருக்கின்றது. 
தங்கள் அரசியல் இலாபம் தேடும் அரசியல் வாதிகளால் கட்டிய வைத்திய சாலைக்கு முஸ்லிம் மக்களே சரியாக செல்லாத பட்சத்தில் ஆரையம்பதி வைத்தியசாலைக்கே செல்கின்றார்கள். 

சிலரால் காத்தான்குடி வைத்தியசாலை என்று அழைப்பது வழக்கம் அதைப் பதிவிலும் சிலர் மாற்றம் செய்தமையினால் இலகுவான முறையில் அவர்கள் கட்டிய வைத்திய சாலையை பழமையான காத்தான்குடி வைத்தியசாலையாக சுட்டிக்காட்டி ஆரையம்பதி வைத்திய சாலையின் மகிமையில் மாவட்ட வைத்திய சாலையாக உரு மாற்றம் பெறுகின்றது புதிய காத்தான்குடி வைத்தியசாலை. 
உண்மையில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உணர்வுள்ள தமிழர்கள் இதை பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். 

பழமை வாய்ந்த ஆரையம்பதி வைத்தியசாலை புறக்கணிக்கப் படுகின்றது எங்களுடைய அரசியல் வாதிகளுக்குத் தெரிந்தும் தெரியாதவர்கள் போல இருக்கின்றார்கள் இதற்கான கரணம் என்ன ?

மாவட்ட வைத்தியசாலையாக எத்தனையோ வருடங்களாக இருந்து சேவை ஆற்றிய ஆரையம்பதி வைத்தியசாலை சில தனிநல அரசியல் வாதிகளின் இலாபத்திற்காக பிரதேச வைத்தியசலையாக மாட்டப்படுவது அனைத்து மக்கள் மனதிலும் பெரும் கவலையாக இருக்கின்றது. 
தினம்தோறும் இந்த வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகள் 300 இலிருந்து 500 பேர் வரையாகும். 

வார பரிசோதனைக்காக வரும் மக்களின் தொகை 1000-1500 ஆக இருந்தும் இந்த வைத்தியசாலை ஏன் புறக்கணிக்கப்படுகின்றது என்பதை தெரிந்தும் தெரியாதவர் போல இருப்பது ஏன் ?

காத்தான்குடியில் அமைந்துள்ள வைத்திய சாலைக்கு யாருமே செல்லாத நிலையில் பல கோடி செலவில் கட்டப்பட்ட வைத்திய சாலை பாழடைந்து போய்விடும் என்பதைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் அரசியல் வாதிகள் இவ்வாறு கேவலமான முறையில் மாற்றம் செய்கின்றார்கள். 

கல்லடி ,நாவற்குடா,மஞ்சந்தோடுவாய் ,காத்தான்குடி ,ஆரையம்பதி ,தாளங்குடா ,புதுக்குடியிருப்பு ,கிரான்குளம் ,செட்டிபாளையம் ஆகிய நகரங்களிலிருந்து ஆரையம்பதி வைத்திய சாலைக்கு மக்கள் வருவதாக இருந்தால் போக்குவரத்திற்கு குறைந்தது 15 ரூபாய் போதுமானது. அதே காத்தான்குடி வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் பிரதான வீதியிலிருந்து இறங்கி முச்சக்கர வண்டி மூலமாக நூறு ரூபாய் கொடுத்து செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள் மக்கள். 

ஒரு அரசியல் வாதியின் சுய நலத்திற்காக எங்கள் ஏழை மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது முறையாகுமா ?

மக்களுக்கு சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலை திட்டமிட்டு மாற்றம் பெறுவது வேதனையாக உள்ளது. எல்லா வழிகளிலும் தமிழராகிய நாங்கள் ஏமாற்ற வலிச்சுமைகளை சுமந்து கொண்டே இருக்கின்றோம், என்பதற்காக உங்கள் பகல்க் கனவுளை நிஜங்களாக்க எண்ணிவிட வேண்டாம், என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கின்றோம். 

மக்களைக் காத்து வந்தவர்கள் இல்லாத வேளையில் காட்டு நரிகளை நாடாள விடவே மாட்டோம். வீரதீரம் கொண்ட இன உணர்வாளர்களே எழுக பின்தள்ளப்படும் ஆரம்ப ஆரையம்பதி வைத்தியசாலையைக் காப்பாற்ருவதற்கு. வைத்திய சாலை பின்தள்ளப்பட்டால் ஏற்படும் பாதகமான விளைவுகளாக இங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வைத்தியர்கள் குறைக்கப்படுவார்கள், 

தாதியர்கள் குறைக்கப்படுவார்கள், மருந்து வசதிகள் இல்லாது போகும் நிலை உருவாகும். இன்றைய நிலையில் வாந்திக்குக் கூட மாத்திரைகள் தனியார் மருந்துக்கடைகளில் வாங்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 
அனைத்து உறவுகளும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக இந்த அரசியல் இலாபம் தேடும் குள்ள நரிகளை முட நரிகளாக்க முடியும் என்பதை நம்பிக்கையாக கூறுகின்றோம். 

இது இனங்களின் மிகவும் அவசியமான ஒன்றாகும். எங்களின் சக்தியாக தமிழ் அரசியல் வாதிகள் இருப்பார்கள் என்று அமைதி காத்திட வேண்டாம். எதிர்க் கட்சி என்று மார்பு தட்டும் அரசியல்வாதிகளுக்கு இந்த அவலநிலை தெரியாமலில்லை. இவர்கள் கையாலாகதவர்களாக இருப்பதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. கைநிறையப் பணத்தை வாங்கிக்கொண்டு பேசாமல் இருக்கின்றார்கள் போலவே தெரிகின்றது. 
இவ்வாறான அரசியல் வாதிகள் இனி வரும் காலங்களில் தமிழர்களுக்கு தேவை தானா ?

காத்து வந்த கடவுள்கள் காடுரைந்து போகவே  பார்த்திருந்த நரிகள் கூட்டம் நாடாள எண்ணுகின்றது வீரம் கொண்ட மறவர்களையும் படித்த மேதைகளையும் கொண்ட மாநிலமான தமிழர் நிலம் அதில் ஒன்று தான் ஆரையம்பதி. 

மாவட்ட அபிவிருத்திற்காக வருடம் அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் பணம் ஐம்பது லட்சமாகும். இதில் எந்தவொரு அபிவிருத்தியும் செய்யாமல் வரும் பணங்களைச் சுருட்டிக்கொண்டு வாழும் தமிழ் அரசியல் வாதிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதை மனதில் கொள்வோமாக! 

முஸ்லிம்கள் வாழும் இடங்களைப் பார்த்தால் எங்கள் அரசியல் வாதிகளின் கள்ளத்தனம் புரிகின்றது தேசிய ரீதியில் ஆரையம்பதி வைத்திய சாலை மூன்றாம் இடத்தைப்பெற்றிருந்த போதிலும் இந்த வைத்தியசாலை பிரதேச வைத்திய சாலையாக மாறுவதற்குக் காரணம் என்ன ?

வெளிநாட்டவர்கள் வந்து பார்வையிட்டு 48 இலட்சம் பொறுமதியான xray இயந்திரத்தை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்கள், அதைக்கூட பராமரிக்க வசதிகள் இன்றிக் கிடக்கின்றது. பல அரசியல் வாதிகளிடம் விண்ணப்பம் கோரியும் அது நிராகரிக்கப்பட்ட நிலையில் கிடக்கின்றது. இப்படிப்பட்ட கைபொம்மை அரசியல் வாதிகள் எம் இனத்துக்கு தேவையா?

ஆரையம்பதி வைத்திய சாலை வளாகத்தில் புதிய கட்டிடங்கள் நிறுவுவதற்க்கு தாராளமான இடங்கள் இருந்தும் புறக்கணிக்கப்படுவதன் காரணம் அரசியல் பலத்தை பயன்படுத்தி தமிழர்களை அடிமைகளாக்கப் பாடுபடுகின்றமையே ஆகும். அதைக் கருத்தில் கொள்ளாது தங்கள் குடும்ப நலனுக்காக அரசியல் பேசுகின்றார்கள் தமிழ் அரசியல் வாதிகள். 

மக்கள் அனைவரும் கணிப்பீடு செய்யாமல் வெறுமனே அரசியல் வாதிகளின் பித்தலாட்டத்துக்குத் துணைபோகும் நல்லாட்சி என்ன செய்யப் போகின்றது? தமிழர்களின் பலம் நன்கு அறியும் இன்றைய அதிபர் இருந்தும் முட்டாள்த்தனமாக துணை போவார்களானால் இனி வரும் தேர்தல்க் காலங்களில் ஆட்சி பறி போகும் நிலையே உருவாகும்.

No comments

Powered by Blogger.