ஐபோன் விற்பனையில் சரித்திரம் படைத்தது ஆப்பிள் நிறுவனம்!

ஸ்மார்ட் கைப்பேசி உலகில் மக்கள் நம்பிக்கை வென்ற முன்னணி நிறுவனமாக ஆப்பிள் திகழ்கின்றது.

இந்த நிறுவனம் தனது முதலாவது ஐபோன் கைப்பேசியினை 2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்திருந்தது.

இவ் வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள iPhone 8 உடன் சேர்த்து ஐபோன் உற்பத்தியில் 10 வருடங்களை பூர்த்தி செய்கின்றது.

அதாவது ஒரு தசாப்தத்தை பூர்த்தி செய்துள்ள ஆப்பிள் நிறுவனம் சில புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி இக் காலப் பகுதியில் சுமார் 1.2 பில்லியன் ஐபோன்களை உலகெங்கிலும் விற்பனை செய்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் மட்டும் சுமார் 200 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.