குருமண்வெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குட பவனி

                                                                                                                   -நிரோஸ்காந்-
மட்டக்களப்பு குருமண்வெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குட பவனி சங்காபிசேகம் ஆகிய நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இவ் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் கடந்த மாதம் நடைபெற்றிருந்தது.

தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூசைகள் நடைபெற்று வந்த நிலையில் 22 ஆம் திகதி இன்று செவ்வாய்க்கிழமை சங்காபிசேகம் பாற்குட பவனி ஆகியன வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments

Powered by Blogger.