வெல்லம்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல்: மாணவி படுகாயம்

கொலன்னாவ – வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இம்முறை உயர் தர பரீட்சையில் தோற்றியுள்ள மாணவியொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீட்டிற்குள் இனந்தெரியாத நபர்கள் நுழைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் மாணவியும், அவரது தாயும், தந்தையுமே படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

25 பேர் கொண்ட குழு இவர்கள் இருந்த வீட்டிற்குள் நுழைந்து சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் நீண்டகாலமாக நிலவிய முரண்பாடு காரணமாகவே குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.