வைரலாக பரவிய இந்த குழந்தை யார் என்று தெரியுமா?

இந்திய அணி வீரர்களான விராட் கோஹ்லி, தவான், யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் 3 வயது சிறுமி சிறுமி ஒருவர் வீட்டுப் பாடம் செய்யும்போது தனது தாய்க்கு பயந்து கதறி அழுத வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தனர்.

குறித்த வீடியோ வைரலாகவே, சிறுமியை இப்படியா அடிப்பது, சிறுமியின் போக்கில் படிக்கவிடுங்கள் என கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் குறித்த சிறுமி பாலிவுட் பாடகர்கள் டோஷி மற்றும் சரிப் சப்ரி ஆகியோரின் சொந்தக்கார சிறுமி என்பதும், அவரது பெயர் ஹினா எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் டோஷி, எங்கள் குடும்ப வாட்ஸ்ஆப் குரூப்பில் பகிருவதற்காக அந்த வீடியோ எடுக்கப்பட்டது. விராட் கோஹ்லி மற்றும் ஷிகர் தவானுக்கு எங்களை பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

ஏனெனில் கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் குழந்தை தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்ததால், அவர்களின் உறவினர்களின் குழந்தையாகத் தான் இருக்கும் என்று சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. அதற்கு விடை அளிப்பதற்கே டோஷி இதை தெளிவுபடுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.