பிரித்தானியாவின் கத்தி ஏஞ்சல் சிலைக்கு சிக்கல்

பிரித்தானியாவில் ஒரு லட்சம் கத்தியால் உருவாக்கப்பட்ட ஏஞ்சல் சிலையை நிறுவ அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியா தலைநகரான லண்டனில் 27 அடி உயரத்தில் 1 லட்சம் கத்திகளை கொண்டு ஏஞ்சல் சிலை உருவாக்கப்பட்டது. அந்தச் சிலையின் சிறப்பு அம்சமே, குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட ஒரு லட்சம் கத்திகள்தான்.

பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பகுதிகளைச் சேர்ந்த பொலிசாரிடம் இருந்து இந்தக் கத்திகள் பெறப்பட்டன. இவை அனைத்தும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மட்டுமின்றி குறித்த சிலை நிறுவும் பொருட்டு நாட்டிங்ஹாம்ஷையர் பொலிசார் 1500 கத்திகளை வழங்கியுள்ளனர். மேலும் நாட்டில் உள்ள 43 பொலிஸ் படையினரும் இதறிகாக கத்திகளை வழங்கியுள்ளனர்.

சில கத்திகளில் பாதிக்கப்பட்டவரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு கண்டிப்பாக நெஞ்சைப் பிசையும் ஒரு செய்தியை வழங்கும் என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த சிலை அல்பிராட்லி என்பவரால் உருவாக்கப்பட்டது. கத்தி ஏஞ்சல்" என்று பெயரிடப்பட்ட சிலை லண்டனில் உள்ள டிராபால்கர் சதுக்கத்தில் வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்மூலம், 'சேவ் ஏ லைஃப், சரண்டர் யுவர் நைப்' என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரித்தானியா முழுவதும் கத்தியால் நடைபெறும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

ஆனால் அந்த சிலையை நிறுவ பிரித்தானியா அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. மட்டுமின்றி சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் நகரங்களில் ஒன்று லண்டன் என்பதால் குறித்த சிலையானது எதிர்மறையான செய்தியை உலக மக்களுக்கு அளிக்கும் வகையில் அமையும் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது மேலும் வன்முறையை தூண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.