பாண்டிருப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் தபால் ஊழியர் ஸ்தலத்தில் பரிதாபமாக பலி!!

- செ.துஜியந்தன் -
பாண்டிருப்பு பிள்ளையார் கோவில் பிரதான வீதியில் (03)நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம் பெற்ற வாகனவிபத்தில் தபால் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் பாண்டிருப்பைச் சேர்ந்த 45வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் சிவானந் என்பவராவார் வியாழக்கிழமை இரவு கல்முனையில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வந்தவர் தனது வீட்டுக்குச் செல்வதற்க்கு பாண்டிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக வீதியைக்கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது எதிரே பொருட்களை ஏற்றிக்கொண்டு வேகமாக பயணித்த சிறியரக வாகனம் ஒன்று மோதியதில் ஸ்தலத்திலே தபால் ஊழியர் பரிதாபகரமாக பலியானார்.

விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நேர்த்திக்கடனாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக சென்றுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.