இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி

இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது.

231 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 44.2 ஓவர்கள் நிறைவில் 231 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.

கண்டி, பல்லேகல மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.

களத்தடுப்பை தெரிவு செய்த இந்திய அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிபட்ச ஓட்டங்களாக சிறிவர்தன 58 ஓட்டங்களையும், கப்புகெதர 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நிரோஷன் திக்வெல்ல 31 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பந்து வீச்சில், பும்ரா 4 விக்கட்டுக்களை வீழ்த்திய நிலையில், சஹால் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதனையடுத்து, 237 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

போட்டி ஆரம்பமான நிலையில், மழை குறுக்கிட்டதால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 47 ஓவர்களில் 231 என்ற இலக்குடன் இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பமானது.

No comments

Powered by Blogger.