மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


சுன்னாகத்தில் சற்றுமுன் ரயிலில் மோதி இளைஞன் பலி

காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம், யாழ் சுன்னாகம் புகையிரத நிலையத்தை அண்மித்துக் சென்றுகொண்டிருந்தபொழுது புகையிரதப் பாதையில் நின்ற இளைஞன் மீது மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான்.

இருப்பினும், சம்பவத்தில் பலியானவர் அடையாளம் காணப்படாத நிலையில் சுன்னாகம் புகையிரத நிலையத்தில் சடலம் இப்பொழுது வைக்கப்பட்டுள்ளது.

விபத்து நடைபெற்ற இடத்திற்கு இருபுறத்திலும் கடவைகள் இருக்கின்ற பொழுதும், கடவையை பாவிக்காமல் கடக்க முயன்றதினால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் அல்லது தற்கொலை முயற்சியாகக் கூட இருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.